"ஹலோ தலைவரே, உலகத்தோடு சேர்ந்து நம்ம தமிழக மக்களும் புதிய ஆண்டான 2023-ஐ கொண்டாட்டமா வரவேற்றிருக் காங்க''”

Advertisment

"ஆமாம்பா... ஆட்டம் பாட்டம், வழிபாடு, வாழ்த்துப் பரிமாற்றம்னு பலத்த எதிர் பார்ப்போடு மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றிருக்காங்க. தமிழக அரசும் அனைத்துத் தரப்பின ரையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்குதே.''”

"உண்மைதாங்க தலைவரே, மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசும், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண் டாட, ரேசன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபா யோடு, பச்சரிசி, சர்க்கரை, கரும்புன்னு வழங்கப்போவதாக புத்தாண்டு சமயத்தில் அறிவித்து, மக்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கு. அதேபோல், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகள்னு புத்தாண்டுப் பரிசுகளை அறிவித்து உற்சாக வெள்ளத்தைப் பாயவிட்டிருக்கு. ’புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!’-ன்னு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்த ஸ்டாலின், இந்த நாளில் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று வணங்கியதை அனை வரும் வியப்பாகவே பார்க்கிறாங்க.''”

ss

Advertisment

"புத்தாண்டு நாளில் முதல்வர் வீடும் களைகட்டுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஆங்கில புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து 1ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டா லினை, அமைச் சர்கள் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் அவரது சித்தரஞ் சன் சாலை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற் றார்கள். அதைப் போலவே, ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தங்கள் வாழ்த்துக்களை முதல்வ ரிடம் பரிமாறினார்கள். இதற்கிடையே 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புத்தாண்டுப் பரிசாக பதவி உயர்வை வழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதைத் தமிழக அரசின் புத்தாண்டுப் பரிசாக ஐ.ஏ.எஸ். தரப்பு நினைக்குது. அதேபோல, பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு இருப்பதோடு, அவர்களில் சிலருக்கு டிரான்ஸ்பரும் தரப்பட்டிருக்கு.''”

"ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றப் பின்னணியில் கோட்டைக்கு வெளியே இருக்கும் ஒருசில பவர் புள்ளிகளும் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”

"ஐ.ஏ.எஸ்., ஐ.பி,.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் டிரான்ஸ்பர் விவகாரத்தில் முதல் வரின் மருமகன் சபரீசன், உதயநிதி ஆகியோருக்கு நெருக்கமான அண்ணாநகரிலுள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் அண்ணா நகரிலுள்ள ஒரு வீட்டில்தான் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் பட்டியலே ரெடியானதுன்னு கோட்டை அதிகாரிகள் மத்தியி லேயே டாக் அடிபடுது. தலைமைக்கு நெருக்கமான இப்படிப்பட்ட பவர்புள்ளிகள்தான், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளின் தலையெழுத் தை இப்போது எழுதுகிறார்களாம். இந்த வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றமும் பெரிய அளவில் விரைவில் வரவிருக்கிறதாம். ஒரே துறையில் நங்கூரம் அடித்த மாதிரி கோட்டையில் உட்கார்ந்திருக்கும் சர்ச்சைக்குரிய அதிகாரிகள் மட்டும் இப்படிப்பட்ட பட்டியலில் இருந்து எப்படியோ தப்பிச்சிடறாங்க.''”

"பதவி இறக்கம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் சிலர் தங்கள் செல்வாக்கால் பதவி உயர்வு அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கிசுகிசு உலவுதே?''”

"அப்படிப்பட்ட செய்திகள் அடிபடுவது உண்மைதாங்க தலைவரே! குறிப்பாக, செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலனுக்கு எதிரான பல புகார் கள் முதல்வர் ஸ்டாலின் டேபிளில் குவிந்தபடியே இருந்தது. அதனால் அவரை வேறு துறைக்கு மாற்றும்படி தனது செயலாளர் உதயசந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாராம். இந் நிலையில் அவருக்கு மதுரை அல்லது கோவையில் கலெக்டர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதே போல, சர்ச்சைக்குரிய அதிகாரிகள் சிலரும் பவர்ஃபுல் நபர்களைப் பிடித்து, தாங்கள் விரும்பும் பதவியில் அமர காய்களை நகர்த்தி வருகிறார்களாம்.''”

"சரிப்பா, தி.மு.க.வில் இருக்கும் அணிகளை கவனிக்கும் பொறுப்பை கட்சிப் புள்ளிகள் சிலரிடம் கட்சித் தலைமை ஒப்படைத்திருக்கிறதே?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினுக்கு உதயச்சந்தி ரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜுன்னு 4 ஐ.ஏ.எஸ். அதி காரிகள் செயலாளர்களாக இருக்கிறார்கள். அரசின் முக்கியமான 34 துறைகளையும் இவர்களிடம் பிரித்துக் கொடுத்து, மேற்பார்வை பார்க்கச் செய்திருக்கிறார் ஸ்டாலின். அதே போல், தி.மு.க.வில் இருக்கும் இளை ஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 23 அணிகளையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பை இப்போது 5 பிரமுகர்களி டம் அறிவாலயம் ஒப்படைத்திருக்கிறது. குறிப்பாகச் சொல்வதானால், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விவசாய அணி, தொழில்நுட்ப அணி உள்பட 5 அணிகளும், அமைச்சர் பொன்முடியிடம் பொறி யாளர் அணி, வர்த்தகர் அணி உள்பட 4 அணி களும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடம் இளை ஞர் அணி, மாணவர் அணி, சட்டத்துறை அணி உள்ளிட்ட 5 அணிகளும், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜிடம் தொண்டரணி, மீனவர் அணி உள்ளிட்ட 4 அணிகளும், கனிமொழி எம்.பி. யிடம் மகளிர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 5 அணிகளும் ஒப்படைக்கப்பட்டிருக்கு. இந்த அணி களில் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தா லும் அதனை இந்த ஐவரும்தான் சரி செய்வார்களாம்.''

"ஊரக வளர்ச்சித் துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் எல்லாம், ஒப்பந்ததாரர்கள் இன்றி, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மூலமாகவே நடக்கணும் என்று ஏற்கனவே மாவட்ட கலெக்டர்கள், சேர்மன்கள் ஆகியோருக்கு தெளிவாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தரவு போடப்பட்டி ருக்கிறது. ஆனால், இதற்கு மாறாக, காண்ட்ராக் டர்களை வைத்தே இந்தப் பணிகள் செய்யப்படுவ தாக குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கின. இதை யறிந்த ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஷ் அகமது, அண்மையில் இதைக் கண்டித்தும், இப்படிச் செய்யக்கூடாது என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவை மீண்டும் பிறப்பித்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள 12,542 கிராம ஊராட்சி தலைவர்களும் செயல்படத் தொடங்கினார்கள். ஆனால், இந்த உத்தரவுக்கு மறுபடியும் சிலர் பிரேக் பிடிக்கறாங்க.''

"யார்? உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளா?''

"ஆமாங்க தலைவரே, அங்கங்கே இருக்கும் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் கள்தான், தி.மு.க. அரசின் உத்தரவுக்கே முட்டுக்கட் டையா நிக்கறாங்க. காண்ட்ராக்டர்களிடம் வேலைகளை ஒதுக்கிக் கொடுத்தால்தான் கமிஷன் வாங்க முடியும்னு நினைக்கும் அவர்கள், ஊரக வேலைத்திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உட்பட ஊராட்சிகள் மூலம் செய்யப்படும் அனைத்துப் பணிகளையும், தாங்கள் சொல்லும் காண்ட்ராக்டர்களிடமே ஒப்படைக்கணும்னு ஊராட்சி தலைவர்களிடமும் மாவட்ட கலெக்டர்களிட மும் தகராறு செய் கிறார்களாம். அதோடு வட்டார வளர்ச்சி அலு வலர்களை மிரட்டி யும் வருகிறார் களாம், தங்களுக்கு இசையாத அவர்களை தங்கள் மா.செ.க் கள் மூலம், ட்ரான்ஸ்ஃபரும் செய்ய வைக்கிறாங்களாம். திட்டப் பணிகளின் மொத்த மதிப்பீட்டில் 12 சதவீதம் கமிசன் வேணும்னு கேட்டு, அந்த கமிஷன் வெறியில்தான் இப்படி தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டுகிறார்களாம். இது அவர்கள் கட்சி ஊராட்சித் தலைவர்களையே எரிச்சலடைய வைத்திருக்கிறதாம்.''”

"அரசு கேபிள் டி.வி. ஊழல் விவகாரம், மேலும் மேலும் சிக்கலாகுதே?''”

"ஆமாங்க தலைவரே, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் நடந்த நிர்வாக முறைகேடுகளைப் பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். அந்த முறைகேடுகளால், தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் செட்டாப் பாக்ஸ் இயங்காமல் முடங்கிப் போய்விட்டன. இதனால் பல வீடுகளில் அரசு கேபிள் ஒளிபரப்பு தெரியாததால், கேபிள் ஆபரேட்டர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பல இடங்களில் தகராறு நடந்திருக் கிறது. ரீசார்ஜும் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட தால், வாடிக்கையாளர்களின் குமுறலை அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்க, ஆப்ரேட்டர்கள் பலரும் முயன்றபோதும், அவர்கள் யாருமே போனை அட்டெண்ட் பண்ணவில்லையாம். கடிதத்தை போர்ஜரியாக இணைத்திருந்த ஷோபாஸ் என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சீன நிறுவன மான கோஸ்பெல், அரசு கேபிள் டி.வி. நிறுவனத் துக்கு எதிராக, வழக்கைப் போட்டுள்ளது. இந்த நிலையில், போர்ஜரியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள் ளது நீதிமன்றம். இதனால் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார்கள் அதிகாரிகள்.'' ”

"தமிழக முதல்வரை, அரசு போக்குவரத்துக் கழக ஆடிட்டர் ஒருவரே தரக்குறைவாகத் திட்டித் தீர்க்கிறார்னு தகவல் வருதே?''”

"அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆடிட் செய்ய தனியாக ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவரை அரசு நியமித்திருக்கிறது. பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த வாரம் ஆடிட்டிங் செய்ய, விழுப்புரம் போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர், அனைவர் முன்னிலையிலும் சம்பந்தமே இல்லாமல் தமிழக முதல்வர் ஸ்டாலினை மிகவும் தரக்குறைவாக திட்டித் தீர்த்து விமர்சித்தாராம். இதைக் கேட்டு அதிர்ந்து போன போக்குவரத்துப் பணியாளர்கள், எதிர்ப்பு தெரிவித்தும் கூட, அவர் மேலும் மேலும் விமர் சனத்தை வைத்திருக் கிறார். இதனால் அப் செட்டான தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள், ‘’இப்படிப்பட்ட பா.ஜ.க. ரவிச்சந்திரனை அனைத்து போக்குவரத்து கழகத்தை யும் ஆடிட் செய்யச் சொன்னால், அபாண்ட ரிப்போர்ட்தான் எழுது வார். அது ஊழல் புகா ராக பா.ஜ.க. அண்ணா மலை கைக்குத்தான் போகும்’ என்கிறார்கள் ஆதங்கமாக.''”

"கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் அதிரடிகள் ஆரம்பித்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இப்போது கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தின் விசாரணை, அதிரடியாக விறுவிறு வேகம் அடைந்திருக்கிறது. வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு, அடி ஷனல் டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள முருகவேல், சந்திரசேகர் என்ற இரண்டு அதிகாரிகளைக் களமிறக்கி இருக்கிறது. இவர்கள் கூடலூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் தங்கி இருந்தபடி, சம்பவத்தின்போது குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்த அனில், ஷாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் மில்லர் ஆகியோரிடம் ஏறத்தாழ 8 மணி நேரம் துருவித் துருவி விசாரித்திருக்கிறார்கள். அன்றைய முதல்வரான எடப்பாடி, குற்றவாளி களை காப்பாற்ற என்னவெல்லாம் செய்தார்? எப்படியெல்லாம் உத்தரவிட்டார்? என்றும் விசாரித்தார்களாம். இது எடப்பாடி தரப்பைக் கொஞ்சம் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.''”

"தமிழக அமைச்சருக்கும், கோட்டை அதிகாரிகளுக்குமிடையே ரேஷன்கடை தொடர்பா முட்டிக்கொண்டதாமே?''

"ஆமாங்க தலைவரே... தமிழகம் முழுக்க இருக்கும் ரேசன் கடைகளின் அனைத்து விபரங் களையும் கணினிமயப்படுத்த உத்தரவிட்டிருக் கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக 300 கோடிவரை ஒதுக்கவும் திட்டம் வகுக்கப்பட்டி ருக்கிறது. இதைத்தொடர்ந்து கோட்டையில் இருக்கும் மிக முக்கிய மான பவர்ஃபுல் அதி காரிகள் இருவர், பிற மாநிலங்கள் பிளாக் லிஸ்டில் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்திடம் இந்த வேலைக்கான டெண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்களாம். ஆனால், இதை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரான சக்கர பாணி ஏற்க மறுக்கிறா ராம். இதனால் அவர்கள் மத்தியில் இணக்க மில்லாப் போக்கு உரு வாகி இருப்பதாக, கோட்டைப் பக்கம் செய்தியொன்று புகைகிறது.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கிறேன் தலைவரே. அ.தி.மு.க. ஆட்சியில் அதானிக்காக, சூரிய மின்சார திட்டங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராம நிலங்களை மொத்தமாகக் கையகப்படுத்தியது போல, தற்போது தி.மு.க. ஆட்சியில ஒரு துறையின் பவர் உள்ள ஒருத்தரு, அவருக்கு ஆல் இன் ஆலா இருக்குற சு...ல ஆரம்பிச்சு ன்...ல முடியிறவருதான் எல்லாம். இவரு தெலுங்கானா வைச் சேர்ந்த ரெட்டி ஒருத்தர வச்சு, நம்ம ஊர்கள்ல பலவீனமா இருக்குற நிறுவனங்கள கையகப்படுத்தி, சடசடன்னு ஒரு சப் ஸ்டேஷனயும் செல்வாக்குல ஏற்பாடு செஞ்சு பக்கவா வச்சுருவாரு. மேற்படி கம்பெனிகளுக்கு 400 அல்லது 500 ஏக்கர் சொத்துக்கள் இருக்கும். அப்படி கையகப்படுத்துனத, வெளிநாட்டுல இருந்து சூரியசக்தி நிறுவனத்துல இன்வெஸ்ட் பண்ண வந்த ஃபாரின் பார்ட்டியை சு...னா மூல மாக, அந்த குறிப்பிட்ட ரெட்டி பார்ட்டியைப் பார்க்கச் சொல்லி, அவர்மூலமாக ஒரு மெகா டீலிங் போய்க்கொண்டிருக்கிறதாம். கணக்குன்னு பார்த்தா, இதுவரைக்கும் 6,000 ஏக்கருக்கு மேல சப்-ஸ்டேஷன் வசதியோட பிளாட் ரெடியாகி இருக்காம். இந்த விவ காரங்களை அந்தத் துறையில் பவருள்ள வரே கவனித்து வருகிறாராம்.''

___________

இறுதிச்சுற்று!

Advertisment

dd

"தி இந்து' ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் 02.01.2023 அன்று அதி காலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக் கேணி பார்த்தசாரதி திருக் கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின்கீழ், உயிரிழந்த சீனிவாசன் குடும்பத்தா ருக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.